

புதுடெல்லி:
மத்திய அரசுக்கு சொந்தமான யூகோ வங்கியில் கடன் அளிக்கப்பட்டதாக பொய் கணக்கு காட்டி, அவ்வங்கியின் முன்னாள் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான அருண் கவுல் உள்ளிட்டோர் சுமார் 621 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சமீபத்தில் தெரியவந்தது.
இதையடுத்து, அருண் கவுல் மற்றும் இரு தனியார் நிறுவன தலைமை நிர்வாகிகள், இரு ஆடிட்டர்கள் மற்றும் சிலர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் மோசடி வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
டெல்லி, மும்பை ஆகிய பகுதியில் இவர்களுக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் இன்று தீவிர சோதனை நடந்து வருகிறது. #tamilnews #ucobank #cheatingcase #cbi