

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,09,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,680 சரிந்திருந்தது. மேலும் தங்கம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 665-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 320-க்கும் விற்பனையானது.
நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் குறைந்தது. அதன்படி தங்கம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 640-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 120-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,09,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
29-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.109,120
28-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.109,320
27-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,000
26-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,000
25-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,080
29-09-2026- ஒரு கிராம் ரூ.240
28-09-2026- ஒரு கிராம் ரூ.245
27-09-2026- ஒரு கிராம் ரூ.250
26-09-2026- ஒரு கிராம் ரூ.250
25-09-2026- ஒரு கிராம் ரூ.250