GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
Gold
தங்கம்
Published on

தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து17 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று காலை கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.14 ஆயிரத்து 650-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.

இதற்கிடையில் மாலையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது. காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் இருந்து கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்தது. அந்த வகையில் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து800-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை சரிவு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400

27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800

26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080

25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080

24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

28-08-2026- ஒரு கிராம் ரூ.265

27-08-2026- ஒரு கிராம் ரூ.265

26-08-2026- ஒரு கிராம் ரூ.265

25-08-2026- ஒரு கிராம் ரூ.265

24-08-2026- ஒரு கிராம் ரூ.275

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com