

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 17-ந்தேதி கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,535-க்கும், சவரனுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,280 விற்பனையானது. 18-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,08,280-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,535-க்கும் விற்பனையானது.
19-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கும் விற்பனையானது. 20-ந்தேதி சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கும், ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கும், ஒரு கிராம் ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,680 வரை விலை குறைந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.225-க்கும், ஒரு கிலோ ரூ.2.25 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
21-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,120
20-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,920
19-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,560
18-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,280
17-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,280
21-10-2026- ஒரு கிராம் ரூ.230
20-10-2026- ஒரு கிராம் ரூ.240
19-10-2026- ஒரு கிராம் ரூ.240
18-10-2026- ஒரு கிராம் ரூ.240
17-10-2026- ஒரு கிராம் ரூ.240