GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி
Published on: 
Summary

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,07,120-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 17-ந்தேதி கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,535-க்கும், சவரனுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,280 விற்பனையானது. 18-ந்தேதி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு சவரன் ரூ.1,08,280-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,535-க்கும் விற்பனையானது.

19-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கும், ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கும் விற்பனையானது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.230-க்கும், ஒரு கிலோ ரூ.2.30 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

20-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,920

19-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,560

18-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,280

17-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,280

16-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,120

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

20-10-2026- ஒரு கிராம் ரூ.240

19-10-2026- ஒரு கிராம் ரூ.240

18-10-2026- ஒரு கிராம் ரூ.240

17-10-2026- ஒரு கிராம் ரூ.240

16-10-2026- ஒரு கிராம் ரூ.240

X

Maalai Malar
www.maalaimalar.com