GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் - இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து 1,08,720-க்கும், கிராமுக்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.13,590-க்கும் விற்பனையானது.
Gold
Published on: 
Summary

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து 1,08,120-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து 1,10,720-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,840-க்கும் விற்பனையானது. மாலையில் மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,760க்கும், கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.13,720க்கும் விற்பனையானது.

13-ந்தேதி சவரனுக்கு ரூ.280 குறைந்து 1,09,480-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து 1,08,720-க்கும், கிராமுக்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.13,590-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை சரிவு

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து 1,08,120-க்கும், கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2.40 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

14-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,720

13-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,480

12-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,760

11-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,040

10-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,040

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

14-10-2026- ஒரு கிராம் ரூ.245

13-10-2026- ஒரு கிராம் ரூ.245

12-10-2026- ஒரு கிராம் ரூ.245

11-10-2026- ஒரு கிராம் ரூ.245

10-10-2026- ஒரு கிராம் ரூ.245

X

Maalai Malar
www.maalaimalar.com