GOLD PRICE TODAY: 3-வது நாளாக தங்கம் விலையில் மீண்டும் சரிவு - எவ்வளவு குறைந்தது தெரியுமா?

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
Gold
Published on: 
Summary

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,695-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த மாதம் குறைந்து கொண்டே வந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. மேலும் விலை குறைந்து சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் செல்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 2-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை கிராமுக்கு ரூ.655-ம், சவரனுக்கு ரூ.5,240-ம் உயர்ந்தது.

தொடர்ந்து விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட சூழலில், தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

9-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 ரூபாய் உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனையானது. 10-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,210-க்கும், சவரனுக்கு ரூ.360 ரூபாய் குறைந்து ரூ.1,05,680-க்கு விற்பனையானது.

11-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,015-க்கும், சவரனுக்கு ரூ.1,560 ரூபாய் குறைந்து ரூ.1,04,120-க்கு விற்பனையானது. 12-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,815-க்கும், சவரனுக்கு ரூ.1,600 ரூபாய் குறைந்து ரூ.1,02,520-க்கு விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம்

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,01,560-க்கும், கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,695-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,160 குறைந்துள்ளது.

வெள்ளி விலை குறைவு

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.195-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

12-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,520

11-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,120

10-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,680

9-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,040

8-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,280

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

12-11-2026- ஒரு கிராம் ரூ.200

11-11-2026- ஒரு கிராம் ரூ.200

10-11-2026- ஒரு கிராம் ரூ.205

9-11-2026- ஒரு கிராம் ரூ.205

8-11-2026- ஒரு கிராம் ரூ.205

X