GOLD PRICE TODAY: மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை! - இன்றைய நிலவரம்

நேற்று சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனையானது.
Gold
Published on

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது.

அதனை தொடர்ந்து 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது.

அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.

7-ந்தேதி ஒரு சிகராம் ரூ.14 ஆயிரத்து 130-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 8-ந்தேதி கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது.நேற்று சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

09-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,160

08-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160

07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040

06-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520

05-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

09-08-2026- ஒரு கிராம் ரூ.255

08-08-2026- ஒரு கிராம் ரூ.255

07-08-2026- ஒரு கிராம் ரூ.255

06-08-2026- ஒரு கிராம் ரூ.255

05-08-2026- ஒரு கிராம் ரூ.255

X

Maalai Malar
www.maalaimalar.com