GOLD PRICE TODAY : காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!

இன்று மாலை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.
Gold
Published on
Summary

இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்திருந்த நிலையில், தற்போது மாலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1200 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் தங்கம் விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் செவ்வாய்கிழமை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து நேற்று தங்கம் இரண்டு முறை குறைந்தது. காலை தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 940-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 520-க்கும் மாலை கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும் சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய மாலை நேர நிலவரப்படி கிராமிற்கு ரூ.1200 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை

இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையானது. எனினும், மாலையில் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 890-க்கும், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

  • 27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800

  • 26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080

  • 25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080

  • 24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240

  • 23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்துடன் வெள்ளியின் விலையும் மாலையில் அதிகரித்துள்ளது. வெள்ளி விலையானது கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும், கிலோவிற்கு 5,000 ரூபாய் அதிகரித்து பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

  • 27-08-2026- ஒரு கிராம் ரூ.265

  • 26-08-2026- ஒரு கிராம் ரூ.265

  • 25-08-2026- ஒரு கிராம் ரூ.265

  • 24-08-2026- ஒரு கிராம் ரூ.275

  • 23-08-2026- ஒரு கிராம் ரூ.270

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com