ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதம் உயர்வு

ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதமாகவே இருந்தது.
Reserve bank of india
Published on: 

வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தை 5.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் என அழைக்கப்படுகிறது.

நிதிச்சூழலுக்கு ஏற்ப இந்த வட்டி விகிதத்தை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி ஆலோசிக்கும்.

அந்த வகையில் 2026-27 நிதியாண்டுக்காக ஆகஸ்ட் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் நிதிக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.

அதைதொடர்ந்து, ஆகஸ்ட் கூட்டத்தின் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதேபோல், செப்டம்பர் மாதமும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதமாகவே இருந்தது.

இந்நிலையில், வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தை 5.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

அக்டோபரில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி (RBI) பணவியல் கொள்கைக் குழுக் கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் 0.25% (25 அடிப்படை புள்ளிகள்) உயர்த்தப்பட்டு 5.50% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களின் வட்டி விகிதம் உயரும். இதன்மூலம், வீட்டுக்கடன், வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான மாதாந்திர தவணை (EMI) அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com