GOLD PRICE TODAY: இன்று இரண்டு முறை குறைந்த தங்கம் விலை- பவுனுக்கு 2680 ரூபாய் சரிந்தது

இன்று காலை ஒரு பவுனுக்கு 1880 ரூபாய் விலை சரிந்தது.
தங்கம்
தங்கம்
Published on: 
Summary

சென்னையில் தற்போது 22 காரட் தங்கம், 8 கிராம் (ஒரு பவுன்) ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 13 ஆயிரத்து 665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில் கடந்த 10 நாட்களாக சற்று குறைந்த வண்ணம் உள்ளது. இந்த 10 நாட்களில் ஒருசில நாட்களில் சற்று உயர்வை சந்தித்தாலும், சரிவு என்பது இருந்து கொண்டே வருகிறது.

காலையில் 1880 ரூபாய், மாலையில் 235 ரூபாய்

இன்று காலை ஒரு பவுனுக்கு 1880 ரூபாய் குறைந்தது. ஒரு கிராமுக்கு 235 ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் மாலை பவுனுக்கு மேலும் 200 ரூபாய் சரிவை சந்தித்தது. இதன்மூலம் ஒரு நாளில் பவுனுக்கு 2680 ரூபாய் சரிந்துள்ளது. ஒரு கிராமுக்கு 335 ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.

சென்னையில் தற்போது 22 காரட் தங்கம், 8 கிராம் (ஒரு பவுன்) ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 13 ஆயிரத்து 665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை குறைவு

இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் மாற்றம் ஏற்படவில்லை.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

27-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,000

26-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,000

25-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,080

24-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,000

23-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,080

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

27-09-2026- ஒரு கிராம் ரூ.250

26-09-2026- ஒரு கிராம் ரூ.250

25-09-2026- ஒரு கிராம் ரூ.250

24-09-2026- ஒரு கிராம் ரூ.250

23-09-2026- ஒரு கிராம் ரூ.255

X

Maalai Malar
www.maalaimalar.com