GOLD PRICE TODAY : இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?

நேற்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம்
தங்கம்
Published on
Summary

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் தங்கம் விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் செவ்வாய்கிழமை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து நேற்று தங்கம் இரண்டு முறை குறைந்தது. காலை தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 940-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 520-க்கும் மாலை கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும் சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றும் குறைந்த தங்கம் விலை

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800

26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080

25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080

24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240

23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

27-08-2026- ஒரு கிராம் ரூ.265

26-08-2026- ஒரு கிராம் ரூ.265

25-08-2026- ஒரு கிராம் ரூ.265

24-08-2026- ஒரு கிராம் ரூ.275

23-08-2026- ஒரு கிராம் ரூ.270

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com