GOLD PRICE TODAY : ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை- சவரனுக்கு ரூ.2,280 குறைவு

வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம்
தங்கம்
Published on
Summary

கடந்த சில நாட்களாக உயர்வு, சரிவு மாறி வந்த தங்கம் விலை இன்று முக்கிய திருப்பத்தை கண்டுள்ளது. திங்கட்கிழமை உயர்ந்த விலை, செவ்வாய்க்கிழமை சிறு சரிவுக்கு பின், விடுமுறை நாளில் நிலைத்திருந்தது. இன்று காலை குறைந்த விலைக்கு மேலாக, இரண்டாவது முறையாக பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டு, சவரனுக்கு ரூ.2,280 வரை குறைந்திருப்பது நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கவனத்துக்குரிய மாற்றமாகும்.

ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் தங்கம் விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் செவ்வாய்கிழமை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

இந்த இன்று காலை தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 940-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.

மேலும் குறைந்த தங்கம் விலை

இந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும் சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080

25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080

24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240

23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600

22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

26-08-2026- ஒரு கிராம் ரூ.265

25-08-2026- ஒரு கிராம் ரூ.265

24-08-2026- ஒரு கிராம் ரூ.275

23-08-2026- ஒரு கிராம் ரூ.270

22-08-2026- ஒரு கிராம் ரூ.270

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com