GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்!

வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம்
தங்கம்
Published on
Summary

இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது.

ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் தங்கம் விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 15-ந்தேதியில் இருந்து நேற்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சற்று குறைந்த தங்கம் விலை

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240

23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600

22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600

21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800

20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

24-08-2026- ஒரு கிராம் ரூ.275

23-08-2026- ஒரு கிராம் ரூ.270

22-08-2026- ஒரு கிராம் ரூ.270

21-08-2026- ஒரு கிராம் ரூ.270

20-08-2026- ஒரு கிராம் ரூ.260

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com