

கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100-ம். சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்தது. சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 850-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து சனிக்கிழமை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வார தொடக்கநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600
22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600
21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800
20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800
19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200
23-08-2026- ஒரு கிராம் ரூ.270
22-08-2026- ஒரு கிராம் ரூ.270
21-08-2026- ஒரு கிராம் ரூ.270
20-08-2026- ஒரு கிராம் ரூ.260
19-08-2026- ஒரு கிராம் ரூ.250