GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?

ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம்
தங்கம்
Published on

கடந்த 5 நாட்களாக விலைமாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம்... என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது. ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று குறைந்த தங்கம் விலை

இந்த நிலையில், இந்த வாரத்தில் தொடக்கத்தில் இருந்து அதாவது கடந்த 2 நாட்களாக சற்று உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,205-க்கும் சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களாக விலைமாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320

17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160

16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760

15-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760

14-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

18-08-2026- ஒரு கிராம் ரூ.255

17-08-2026- ஒரு கிராம் ரூ.255

16-08-2026- ஒரு கிராம் ரூ.255

15-08-2026- ஒரு கிராம் ரூ.255

14-08-2026- ஒரு கிராம் ரூ.255

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com