GOLD PRICE TODAY : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை- சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து அதிர்ச்சி

நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது.
தங்கம்
தங்கம்
Published on
Summary

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது.

அதிரடி உயர்வு

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை உயர்வு

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

01-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,400

31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960

30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040

29-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

02-08-2026- ஒரு கிராம் ரூ.250

01-09-2026- ஒரு கிராம் ரூ.250

31-08-2026- ஒரு கிராம் ரூ.260

30-08-2026- ஒரு கிராம் ரூ.260

29-08-2026- ஒரு கிராம் ரூ.260

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com