GOLD PRICE TODAY : மாத தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14 ஆயிரத்து 370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 960-க்கும் விற்றது.
தங்கம்
தங்கம்
Published on
Summary

கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14 ஆயிரத்து 370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து960-க்கும் விற்றது.

சற்று உயர்வு

இந்த நிலையில் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை குறைவு

கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960

30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040

29-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040

28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400

27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

31-08-2026- ஒரு கிராம் ரூ.260

30-08-2026- ஒரு கிராம் ரூ.260

29-08-2026- ஒரு கிராம் ரூ.260

28-08-2026- ஒரு கிராம் ரூ.265

27-08-2026- ஒரு கிராம் ரூ.265

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com