காலையில் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் 1680 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது.
ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.
தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14 ஆயிரத்து 370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 960-க்கும் விற்றது.
மாத தொடக்க நாளான இன்று காலையில் தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 நாளாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு 210 ரூபாயும், சவரனுக்கு 1,680 ரூபாயும் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 14,175 ரூபாய்க்கு, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் மாலையில் குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
காலையில் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் 1680 ரூபாய் குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.