பிரதமர் நரேந்திர மோடிக்கு போரிஸ் ஜான்சன், ஏஞ்சலா மெர்கல் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு நாட்டுத் தலைவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஜெர்மனி அதிபர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த அனைத்தையும் பெற வாழ்த்துகள். கடந்த சில ஆண்டுகளில், இந்தியா மற்றும் ஜெர்மனிக்கு இடையிலான பாரம்பரியமான உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். உங்கள் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியின் 70 வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள். விரைவில் உங்களை சந்திப்பேன் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com