பிரதமர் மோடி நலமுடன் பல்லாண்டு வாழ சேவை வாரம்: பாஜக ஏற்பாடு

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையெட்டி அவர் நலமுடன் பல்லாண்டு வாழ நாடு முழுவதும் செப்டம்பர் 14 முதல் 20 வரை 'சேவை வாரம்’ கடைபிடிக்கப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

ஜம்மு:

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் செப்டம்பர் 17-ம் தேதி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நலமுடன் பல்லாண்டு வாழ சேவை வாரம் கொண்டாடப்பட உள்ளதாக பாஜக கட்சியின் தேசிய துணைத்தலைவர் அவினாஷ் ராய் கண்ணா தெரிவித்துள்ளார். 

ஜம்முவில் கட்சி நிர்வாகிளுடன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: 

டீ விற்பனை  செய்பவராக இருந்த நரேந்திர மோடி நம் நாட்டின் பிரதமர் என்னும் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார். அர்பணிப்பு உணர்வுடன் கடுமையாக உழைத்தால் உங்களுக்கான சிறப்பிடத்தை அடையலாம் என்பதற்கு அவர் முன்னுதாரணமாக இருக்கிறார்.

செப்டம்பர் மாதம் 17-ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாள்  வருகிறது. இதையோட்டி செப்டம்பர் 14 முதல் 20 வரை நாடு தழுவிய அளவில் 'சேவை வாரம்' கொண்டாட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சேவை வாரம் முழுவதும் பொது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் பிரதமர் மோடி சிறப்புடன் பல்லாண்டு வாழ இந்நாட்களில் அனைவரும் பிராத்தனை மேற்கொள்வோம்.  

இவ்வாறு அவினாஷ் ராய் கண்ணா தெரிவித்துள்ளார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com