நடிகை சுமலதாவுக்கு ஆதரவு திரட்டும் பாரதிய ஜனதா

மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பாரதிய ஜனதாவினர் ஆதரவு திரட்டி வருகிறார்கள். #sumalatha
நடிகை சுமலதாவுக்கு ஆதரவு திரட்டும் பாரதிய ஜனதா
Published on

மாண்டியா:

மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஜே.டி.எஸ். சார்பில் முதல்வர் குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார்.

சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் மாண்டியா தொகுதியில் பா.ஜனதா, வேட்பாளரை நிறுத்தவில்லை.

சுமலதாவுக்கு காங்கிரசார் சிலரும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் அவருக்கும் நிகிலுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

இதற்கிடையே சுமலதாவுக்கு பா.ஜனதாவினர் ஆதரவு திரட்டி வருகிறார்கள். மேலும் அவருக்கு பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் உதவ வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பா.ஜனதாவின் தேர்தல் வியூகம் குறித்து முன்னாள் துணை முதல்வர் அசோக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒவ்வொரு தொகுதி பற்றியும் விவாதிக்கப்பட்டது. அப்போது மாண்டியா தொகுதியில் சுமலதாவுக்கு பா.ஜனதாவினர் ஆதரவு திரட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பா.ஜனதா தலைவர் டி.ஆர். சித்தராமையா கூறும் போது சுமலதாவுக்கு மாண்டியா தொகுதியில் நிறைய ரசிகர்கள், ஆதரவாளர்கள் உள்ளனர்.

ஆனால் அவருக்கு பூத் கமிட்டி அளவில் தொண்டர்கள் இல்லை. எனவே அதை பூர்த்தி செய்ய பா.ஜனதா முடிவு செய்துள்ளது. பா.ஜனதா பூத் கமிட்டி உறுப்பினர்கள் சுமலதாவுக்கு உதவ முடுக்கிவிடப்படுவார்கள் என்றார்.#sumalatha

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com