பாஜக பாராளுமன்ற குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கும் பாஜக பாராளுமன்றக் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. #BJP #ParliamentaryBoardmeeting
பாஜக பாராளுமன்ற குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் பாஜக சார்பில் பாராளுமன்ற குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

பாலக்கோட்டில் விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. #BJP #ParliamentaryBoardmeeting

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com