டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜனவரி 11ம் தேதி பாஜக தேசிய குழு கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறுகிறது. #BJP #NationalCouncilmeet #RamlilaMaidan
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி:

மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லி பாஜக சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பாஜக தேசிய பொது செயலாளர் அனில் ஜெயின், தேசிய செயலாளர் மற்றும் டெல்லி பாஜக இணை பொறுப்பாளர் தருண் சுக், அமைப்பு பொது செயலாளர் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பாஜக தேசிய குழு கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, பாஜக தலைவர்கள் கூறுகையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் பாஜக தேசிய குழு கூட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து மாநிலங்களில் உள்ள பாஜகவின் 24 பிரிவுகளை சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 12 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு வழிகாட்ட உள்ளனர் என தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக, இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #BJP #NationalCouncilmeet #RamlilaMaidan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com