ராஜஸ்தான்: அமித் ஷா நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.பி. திடீர் மயக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.பி. திடீரென மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான்: அமித் ஷா நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.பி. திடீர் மயக்கம்
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் வந்திருந்தார்.

இன்று காலை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அஜெர்ம் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சன்வார் லால் ஜாட் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அங்கிருந்த பா.ஜ.க.வினர் அவசரமாக ஆம்புலன்சை வரவழைத்தனர். அவரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முக்கிய தலைவர்கள் பலர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com