உ.பி. எம்.பி. இடைத்தேர்தல் - கோரக்பூரில் பா.ஜ.க.வும், புல்பூரில் சமாஜ்வாதியும் முன்னிலை

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் கோரக்பூரில் பா.ஜ.க.வும், புல்பூரில் சமாஜ்வாதியும் முன்னிலை வகிக்கின்றன் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #LokSabhaelection #gorakhpur #phulpur
உ.பி. எம்.பி. இடைத்தேர்தல் - கோரக்பூரில் பா.ஜ.க.வும், புல்பூரில் சமாஜ்வாதியும் முன்னிலை
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் கோரக்பூரில் பா.ஜ.க.வும், புல்பூரில் சமாஜ்வாதியும் முன்னிலை வகிக்கின்றன் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #LokSabhaelection #gorakhpur #phulpur

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அறுதி பெரும்பான்மை இடங்களில் வென்றது. இதைத்தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக யோகி ஆதித்யாநாத் பதவி ஏற்றார். துணை முதல் மந்திரிகளாக கேஷவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இவர்களில் யோகி ஆதித்யாநாத், கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தாங்கள் வகித்துவந்த பாராளுமன்ற மக்களவை பதவியை ராஜினாமா செய்துவிட்டு உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையின் மேலவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.

இதனால், யோகி ஆதித்யாநாத் எம்.பி.யாக பதவி வகித்த கோரக்பூர் மற்றும் கேஷவ் பிரசாத் மவுரியாவின் புல்பூர் ஆகிய  பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிகளில் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றிடையே மும்முனைப் போட்டி நிலவியது.

இதையடுத்து, கோரக்பூர் தொகுதியில் 43 சதவீதமும், புல்பூர் தொகுதியில் 37.39 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில், உ.பி.யின் பாராளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

கோரக்பூர் தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் பா.ஜ.க. வேட்பாளர் உபேந்திரா தத் சுக்லா 800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

இதேபோல், புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர சிங் மூன்றாவது சுற்று முடிவில் 1300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து அங்கு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #LokSabhaelection #gorakhpur #phulpur#tamilnews 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com