தமிழக முதல்வரை சந்திக்கிறார் பா.ஜனதா மாநிலத் தலைவர் எல்.முருகன்

கூட்டணி குறித்து முரண்பாடான கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், பா.ஜனதா மாநிலத் தலைவர் எல்.முருகன் முதலமைச்சரை சந்திக்கிறார்.
எல். முருகன்
எல். முருகன்
Published on

அதிமுக-வில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற புதிருக்கு நேற்று முன்தினம் விடை கிடைத்தது. அதிமுக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஓ. பன்னீர் செல்வம் வெளிப்படையாக அறிவித்து சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

கூட்டணி குறித்து பா.ஜனதா மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக தலைவர்களுடன் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதனால் கூட்டணி குறித்து முரண்பாடு கருத்துகள் வெளியாகி கொண்டு வருகின்றன.

இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com