இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் #WakeUpTamilNadu - யாரால் எதற்காக ட்ரெண்டிங்?

ட்விட்டரில் இன்று திடீரென சம்பந்தமே இல்லாமல் #WakeUpTamilNadu என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பாஜகவின் ஐடி டீம் இதனை ட்ரெண்ட் செய்வதாக அதே ஹேஷ்டேக்கில் மற்றவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் #WakeUpTamilNadu - யாரால் எதற்காக ட்ரெண்டிங்?
Published on

ட்விட்டரில் இன்று திடீரென யாரும் எதிர்பாராத வகையில் #WakeUpTamilNadu (தமிழகமே விழித்துக்கொள்) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. திராவிட ஆட்சிகள் ஊழலில் திளைக்கின்றன, தமிழகத்தில் பிரிவினைவாதிகள் அதிகரித்து விட்டனர் என அந்த ஹேஷ்டேக்கில் பலர் கருத்து பதிவிட்டிருந்தனர்.

ஆனால், இந்த கருத்து எல்லாமே தமிழகத்திற்கு வெளியே இருப்பவர்களால் பதிவிடப்பட்டிருந்தது. பாஜக.வின் ஐடி டீம் இந்த வேலையை செய்துள்ளதாக பலர் அதே ஹேஷ்டாக்கில் குற்றம் சாட்டியுள்ளனர். பலர் பாஜகவை தாறுமாறாக விமர்சித்து காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

முதலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அந்த ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. தற்போது அதே ஹேஷ்டேக்கில் பாஜகவை அனைவரும் விமர்சிக்க தற்போது அதுவே அவர்களுக்கு எதிராக மாறிவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com