இந்தியா-இலங்கை டி20 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ரோகித் சர்மா - விராட் கோலி - ரவி சாஸ்திரி
ரோகித் சர்மா - விராட் கோலி - ரவி சாஸ்திரி
Published on

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் என அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர் ஜிம்பாப்வே அணியின் சர்வதேச அங்கீகாரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்காலிகமாக ரத்து செய்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நிராகரித்தது.

அதற்குப் பதிலாக இலங்கை அணியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வந்து விளையாடும்படி அழைப்பு விடுத்தது.  இதுதொடர்பான பேச்சுவார்த்தையின்போது, இலங்கை அணி இந்தியா வந்து மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டி கொண்ட டி20 தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி  முதல் போட்டி ஜனவரி 5-ந் தேதி கவுகாத்தியிலும், 2-வது போட்டி ஜனவரி 7-ந் தேதி இந்தூரிலும், 3-வது போட்டி ஜனவரி 10-ந் தேதி புனேவிலும் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com