

ராயல் என்ஃபீல்டு 750சிசி பேரலெல் டுவின் மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே. சர்வதேச சந்தைக்கு என தயாரிக்கப்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு 750சிசி நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் EICMA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தொடர்ந்து பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது வலைத்தளங்களில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் கசிந்து வந்த நிலையில் சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு சென்னையில் சோதனை செய்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் பஜாஜ் டாமினர் மூலம் ஓட்டுனர் ராயல் என்ஃபீல்டை படிக்க முயற்சித்துள்ளார். சென்னை அருகே நெடுஞ்சாலையில் படமாக்கப்பட்ட வீடியோவில் ராயல் என்ஃபீல்டு 750 சாலையில் அதிவேகமாக செல்கிறது. டாமினரில் மணிக்கு 161 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற போதும் ராயல் என்ஃபீல்டு மிக அசாத்தியமாக கடந்து செல்கிறது.
முன்னதாக வெளியான வீடியோவில் கே.டி.எம். டியூக் 390 மாடல் மூலம் ராயல் என்ஃபீல்டு 750 பிடிக்கும் முயற்சி செய்யப்பட்டது. எனினும் அது தோல்வியிலேயே முடிந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ராயல் என்ஃபீல்டு 750 கே.டி.எம். மற்றும் டியூக் மாடல்களுடன் ஒப்பிடும் போது அதிக செயல்திறன் கொண்டிருக்கும் என்பதால், இந்த மாடல் ஹார்லி டேவிட்சன் 750 மாடலுக்கு போட்டியாக இருக்கும்.
பஜாஜ் டாமினர் 400 சென்னை நெடுஞ்சாலையில் ராயல் என்ஃபீல்டு 750 மாடலை பிடிக்க முயன்ற வீடியோவினை கீழே காணலாம்..,