

ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரில் 4-வது பந்தில் ஜோ பேர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். 2-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் மார்னஸ் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடியது.
என்றாலும், நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. வார்னர் 41 ரன்னில் வாக்னர் பந்தில் அவுட் ஆனார். 64 பந்தில் 3 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். ஆஸ்திரேலியா 61 ரன்னில் 2 விக்கெட்டை இழந்தது.
அடுத்து முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களம் வந்தார். லாபஸ்சாக்னே - ஸ்மித் ஜோடியை நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் எளிதில் பிரிக்க முடியவில்லை. அதேவேளையில் லாபஸ்சாக்னே - ஸ்மித் ஜோடியால் விரைவாக ரன்களும் குவிக்க இயலவில்லை.
லாபஸ்சாக்னே 132 பந்தில் அரைசதம் அடித்தார். லாபஸ்சாக்னே தொடர்ச்சியாக 4-வது சதத்தை அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் 63 ரன்னில் கிராண்ட்ஹோம் பந்தில் வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 144 ஆக இருந்தது.
லாபஸ்சாக்னே நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 143 ரன்னும், அதற்கு முன்னதாக பாகிஸ்தான் டெஸ்டில் 162 ரன்னும், 185 ரன்னும் எடுத்து இருந்தார்.
4-வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் மேத்யூ வடே ஜோடி சேர்ந்தார். ஸ்மித் சிறப்பாக ஆடி 103 பந்தில் அரைசதத்தை தொட்டார். வடே 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சராசரி 2.85 ஆகும். ஆஸ்திரேலியாவின் மந்தமான ஆட்டத்தில் இதுவும் ஒன்று. ஸ்மித் 77 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஸ்மித் பெரிய இன்னிங்ஸ் விளையாடினால் ஆஸ்திரேலியா அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது.