

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் இன்றைய 3-வதுநாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 491 ரன்கள் குவித்துள்ளது. அலஸ்டைர் குக் 244 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார்.
சர்வதேச போட்டியில் 32-வது சதத்தை பூர்த்தி செய்த குக், 5-வது முறையாக இரட்டை சதம் அடித்துள்ளார். இந்த 244 ரன்கள் மூலம் டெஸ்டில் அதிக ரன்கள் குவித்திருந்தவர்கள் பட்டியலில் லாரா, சந்தர்பால், ஜெயவர்தனே ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
மெல்போர்ன் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் 11712 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்தார். 103 ரன்னை எடுக்கும்போது ஜெயவர்தனே எடுத்த 11814 ரன்னைக் கடந்தார். 167 ரன்கள் எடுத்திருக்கும்போது சந்தர்பாலை முந்தினார். 241 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரைன் லாரா எடுத்திருந்த 11953 ரன்களை தாண்டினார்.