செய்திகள்
வங்காள தேசத்திற்கு எதிராக டாஸ் வென்று இந்தியா பந்து வீச்சு தேர்வு- ஜடேஜாவிற்கு இடம்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்காள தேசத்திற்கு எதிராக இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #AsiaCup2018 #INDvBAN #PAKvAFG
இன்று சூப்பர் 4 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

