ஆசிய மல்யுத்த போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 வெண்கலம்

டெல்லியில் நடந்து வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த கிரீகோ ரோமன் ஆண்களுக்கான 85 கிலோ எடைப்பிரிவு பந்தயத்தில் இந்திய வீரர் அனில் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஆசிய மல்யுத்த போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 வெண்கலம்
Published on

புதுடெல்லி :

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் முதல் நாளில் கிரீகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் ஹர்பிரீத்சிங் (80 கிலோ) வெண்கலப்பதக்கம் வென்றார்.

2-வது நாளான நேற்று நடந்த கிரீகோ ரோமன் ஆண்களுக்கான 85 கிலோ எடைப்பிரிவு பந்தயத்தில் இந்திய வீரர் அனில் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இதேபோல் பெண்களுக்கான 75 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com