

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப்போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியாவை நேற்று எதிர்கொண்டது. இதில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஓமன், பாகிஸ்தான், ஜப்பான் அணிகளை வென்று இருந்தது. மலேசியாவுடன் ‘டிரா’ செய்து இருந்தது. #AsianChampionsTrophy2018