

லண்டன்:
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 251 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்தப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் இல்லை. வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் இன்னும் உடல் தகுதியுடன் இல்லை என்பதால் இடம் பெறவில்லை.