கோவையில் நகை பறிப்பு, பிக் பாக்கெட் - சினிமா துணை நடிகர் மனைவியுடன் கைது

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சினிமா துணை நடிகர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
கோவையில் நகை பறிப்பு, பிக் பாக்கெட் - சினிமா துணை நடிகர் மனைவியுடன் கைது
Published on

கோவை:

கோவை நகரில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்ஊத்துக்குழியை சேர்ந்த சீனிவாசன்(வயது 35) என்பவர் சிக்கினார். இவர் ஆர்.எஸ்.புரத்தில் 2 பேர், போத்தனூர், சிங்காநல்லூரில் ஒருவர் என 4 பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து, 15 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

இவர் மதுக்கரை பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் நகைபறித்து வந்துள்ளார். இவரது நண்பர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரிலேயே சீனிவாசனை கைது செய்துள்ளனர். நகை பறிப்புக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இவர் பொள்ளாச்சி பகுதியில் எடுக்கப்பட்ட கொடி உள்ளிட்ட சில சினிமாக்களில் சிறு, சிறு காட்சிகளில் நடித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே சிங்காநல்லூர் போலீசில் ஒரு வழக்கு உள்ளது.

இவரது மனைவி சூர்யா பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் பிக்பாக்கெட் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று பூமார்க்கெட்டில் இருந்து சுந்தராபுரம் சென்ற பஸ்சில் ஒரு பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்த போது பயணிகள் சூர்யாவை கையும், களவுமாக மடக்கிப் பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com