செய்திகள்
மாணவி சோபியா கைது விவகாரம்: நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது - காங்கிரஸ் பாய்ச்சல்
மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தால் நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறியுள்ளார். #Sophia #ManishTewari
தூத்துக்குடி விமானத்தில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கோஷமிட்டு, அந்தக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதை காங்கிரஸ் கட்சி, நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக கூறி கடுமையாக சாடியது.
இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, டெல்லியில் நேற்று கருத்து தெரிவிக்கையில், “இது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லை என்றால், இந்த சூழ்நிலையை நீங்கள் என்னவென்று அடையாளப்படுத்துவீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

