ஆரணி அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவர் பலி

பெரியபாளையம் அடுத்த ஆரணி அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தியாகராஜன்
தியாகராஜன்
Published on

பெரியபாளையம்:

பெரியபாளையத்தை அடுத்த ஆரணி அருகே உள்ள மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் தியாக ராஜன் (வயது 16). ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக தியாகராஜன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.

இந்த நிலையில் தியாகராஜனின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தியாகராஜன் பரிதாபமாக இறந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com