நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். #ARRahman #Rajinikanth #SoundaryaRajinikanth
நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து
Published on

சென்னை:

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

இதற்கிடையே, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சவுந்தர்யா ரஜினிகாந்தின் வரவேற்பு புகைப்படத்தை பதிவிட்டு, திருமண வாழ்த்துக்க்ள் என குறிப்பிட்டுள்ளார். #ARRahman #Rajinikanth #SoundaryaRajinikanth 

X

Maalai Malar
www.maalaimalar.com