ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் - இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்றார்

ஜூனியர் உலக கோப்பையில் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் சுடும் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பான்வாலா தங்கம் வென்றார். #ISSFJuniorWorldCup #AnishBhanwala
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் - இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்றார்
Published on

சிட்னி:

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பந்தயத்தில் 6 பேர் தகுதி பெற்ற இறுதிப்போட்டியில் 15 வயதான இந்திய வீரர் அனிஷ் பான்வாலா 29 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

சீன வீரர்கள் செங் ஜிபெங் 27 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், ஜாங் ஜூமிங் 23 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். மற்ற இந்திய வீரர்களான அன்ஹாத் ஜவந்தா 4-வது இடமும், ராஜ்கன்வார் சிங் 6-வது இடமும் பெற்றனர்.

இதன் அணிகள் பிரிவில் சீனா 1,733 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், அனிஷ் பான்வாலா, அன்ஹாத் ஜவந்தா, ராஜ்கன்வார்சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி (1,714 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும் வென்றது. சந்து, ஜெப்தேஷ்சிங் ஜஸ்பால், மன்தீப்சிங் ஆகியோர் அடங்கிய மற்றொரு இந்திய அணி வெண்கலப்பதக்கம் பெற்றது.

பதக்கப்பட்டியலில் சீனா 7 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 6 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடம் வகிக்கிறது. #ISSFJuniorWorldCup #AnishBhanwala #Gold

X

Maalai Malar
www.maalaimalar.com