கேரளாவுக்கு இன்று அமித்ஷா வருகை - பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை

கேரளாவில் சிவகிரி மடத்தில் நடைபெறும் நாராயணகுரு பூஜையில் கலந்துகொள்ளும் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். #Amitshah #BJP
கேரளாவுக்கு இன்று அமித்ஷா வருகை - பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவின் சிவகிரியில் உள்ள நாராயணகுரு மடத்தில் இன்று மண்டல பூஜை நடக்கிறது.

சிவகிரி மடத்தில் நடக்கும் நாராயணகுரு பூஜையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கண்ணூர் வருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் இன்று பிற்பகல் சிவகிரி மடத்திற்கு செல்கிறார். அங்கு நடக்கும் பூஜைகளில் பங்கேற்கிறார்.

சிவகிரி மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கு இன்று மாலை நடைபெறும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இன்று திருவனந்தபுரத்தில் தங்கும் அவர் நாளை டெல்லி புறப்படுகிறார்.

சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று அமித்ஷா கேரளா வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Amitshah #BJP

X

Maalai Malar
www.maalaimalar.com