திப்பு சுல்தான் பிறந்தநாளை கொண்டாடுவதில்தான் காங்.அரசு ஆர்வம் காட்டுகிறது - அமித் ஷா குற்றச்சாட்டு

கர்நாடக மாநில அரசு மக்கள் நலத்திட்டங்களின் மீது அக்கறை காட்டாமல் திப்பு சுல்தான் பிறந்தநாளை கொண்டாடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். #amitshah #karnatakagovt #yeddyurappa
திப்பு சுல்தான் பிறந்தநாளை கொண்டாடுவதில்தான் காங்.அரசு ஆர்வம் காட்டுகிறது - அமித் ஷா குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு:

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடக மாநிலம், கலாபுராகி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஐதராபாத் - மும்பை நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஐதராபாத் - கர்நாடகா பகுதியில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டால் இந்த பகுதி நல்ல வளர்ச்சி அடையும். இங்குள்ள பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். இந்த பகுதியின் வளர்ச்சிக்காக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு ஏராளமான நன்மைகளை செய்துள்ளது. ஆனால், பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சி எதுவுமே செய்யாமல் புறக்கணித்து விட்டது.

ஆனால், திப்பு சுல்தான், திப்பு சுல்தான், திப்பு சுல்தான் என்று கூவியபடி திப்பு சுல்தானின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடியதை தவிர இந்த அரசு வேறு எதுவுமே செய்ததில்லை. மேலும், இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி கொன்றதுடன், கோயில்களையும் இடித்து தள்ளிய பாமினி சுல்தான்களுக்காக விழா எடுக்கவும் இங்குள்ள காங்கிரஸ் ஆட்சி திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த மாநில மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். இவர்களும்  பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் மனது வைத்தால் காங்கிரஸ் அரசை வீழ்த்திவிட முடியும். இதற்கான பொறுப்பும் கடமையும் உங்களை தவிர வேறு யாருக்கு உண்டு? என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

பிரதமர் மோடியுடன் உள்ள மோதல் போக்கினால் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்த மாநில மக்களை வந்தடையாத வகையில் இங்குள்ள காங்கிரஸ் அரசு தடைக்கல்லாக இருந்து வருகிறது. பிரதமருக்கு துணையாக இருந்து இந்த திட்டங்கள் எல்லாம் உங்களுக்கு வந்து சேரும் வகையில் செயலாற்ற கூடிய ஒரு முதல் மந்திரியை நீங்கள் கொண்டு வர வேண்டும். 

இந்த பணியை செய்து முடிக்கக்கூடியவர் எடியூரப்பா மட்டும்தான். எதிர்வரும் தேர்தலில் நீங்கள் அனைவரும் அவரை ஆதரித்து உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் இந்த காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுகட்டி, விடை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews #amitshah #karnatakagovt #yeddyurappa 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com