பேரணியில் பங்கேற்ற அமித் ஷா
செய்திகள்
மகாத்மா காந்தி பிறந்தநாள் பேரணி- அமித் ஷா, ராகுல் காந்தி பங்கேற்பு
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் நடைபெற்ற பேரணிகளில் பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது காந்தியின் 150வது பிறந்ததினம் என்பதால் அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் காந்தியடிகள் பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தியின் கொள்கைகளை பரப்பும் வகையில் பாஜக சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மற்றொரு இடத்தில் பேரணி நடைபெற்றது.

