இந்தியாவின் உலக புராதன நகரம் ஆமதாபாத்: யுனெஸ்கோ அறிவிப்பு

இந்தியாவின் முதலாவது புராதன நகரமாக ஆமதாபாத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
இந்தியாவின் உலக புராதன நகரம் ஆமதாபாத்: யுனெஸ்கோ அறிவிப்பு
Published on: 

ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பானது உலகின் பல்வேறு புராதன நகரங்களையும், சின்னங்களையும் பார்வையிட்டு அவற்றை பழமை வாய்ந்த புராதன சின்னமாக அறிவித்து வருகிறது.

இந்தியாவில் பல இடங்கள் புராதன சின்னம் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில் குஜராத் மாநில தலைநகரான ஆமதாபாத்தை புராதன நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

இதற்கு குஜராத் முதல்-மந்திரி விஜய்ரூபானி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். ரூபானி கூறுகையில் யுனெஸ்கோவின் அறிவிப்பு பிரமிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இது இந்தியாவிலேயே முதலாவது புராதன நகரமாக ஆமதாபாத் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆமதாபாத்தை யுனெஸ்கோ உலக புராதன நகரமாக அறிவித்து இருப்பதை ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புராதன நகரம் பட்டியலில் இடம் பெறுவதற்கான போட்டியில் டெல்லி மும்பையும் பங்கேற்றது. ஆனால் ஆமதாபாத் பெருமையை தட்டிக் சென்றுவிட்டது.

600 ஆண்டுகளுக்கு முன்பு ஆமதாபாத்தில் மன்னர் அகமது ஷாவால் சுற்றுச் சுவருடன் கூடிய கோட்டை கட்டப்பட்டது. நூற்றுக் கணக்கான குளங்கள் இதில் உள்ளது.

இங்கு மகாத்மா காந்தி 1915-ம் ஆண்டு முதல்1930-ம் ஆண்டுவரை வசித்தார். 1984-ம் ஆண்டு முதல் முறையாக ஆமதாபாத்தை புராதன நகரமாக தேர்வு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு தொடங்கியது. இதற்காக ஆமதாபாத் மாநகராட்சி சார்பில் புராதன சின்ன ஆய்வு பிரிவும் தொடங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com