அ.தி.மு.க.வில் இருந்து விலகி நடிகை வினோதினி அ.ம.மு.க.வில் இணைந்தார்

நடிகை வினோதினி அ.தி.மு.க.வில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க.வில் இணைந்துள்ளார்.
தினகரன் முன்னிலையில் வினோதினி அ.ம.மு.க.வில் இணைந்தார். அருகில் நடிகர் ரஞ்சித்.
தினகரன் முன்னிலையில் வினோதினி அ.ம.மு.க.வில் இணைந்தார். அருகில் நடிகர் ரஞ்சித்.
Published on

சென்னை:

விசு இயக்கத்தில், எஸ்.வி. சேகர் நடித்த, மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் வினோதினி.

‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். 40-க்கும் மேற்பட்ட படங்களிலும், சித்தி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார்.

சீரியல்களில் நடிப்பை தொடர்ந்து வந்ததோடு தனது கணவர் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த அவர், தற்போது அ.ம.மு.க.வில் இணைந்துள்ளார். அ.ம.மு.க. உறுப்பினரும், நடிகருமான ரஞ்சித் வினோதினியை அ.ம.மு.க.வில் இணைத்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தை டிடிவி தினகரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக வினோதினி அதிமுகவில் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com