நடிகர் அமிதாப்பச்சன் காங்கிரசுக்கு ஆதரவு?

நடிகர் அமிதாப்பச்சன் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்வதால் அவர் காங்கிரசை ஆதரிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நடிகர் அமிதாப்பச்சன் காங்கிரசுக்கு ஆதரவு?
Published on

நடிகர் அமிதாப்பச்சன் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தையும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தையும் பின் தொடர்கிறார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கபில்சிபில், அகமதுபடேல், அசோக் கெலாட், அஜய் மாக்கான், ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், சி.பி.ஜோஷி ஆகியோரின் டுவிட்டர் பக்கத்தையும் இந்த மாதத்தில் இருந்து பின் தொடர்கிறார்.

மேலும் காங்கிரஸ் தலைவர்களான மணீஷ் திவாரி, ‌ஷகீல் அகமது, சஞ்சய் நிருபம், ரன்தீப் கர்ஜேவாலா, பிரியங்கா சதுர்வேதி, சஞ்சய்ஜா ஆகியோரின் டுவிட்டர் பக்கங்களையும் தொடர்கிறார்.

அமிதாப்பச்சன் திடீரென்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் டுவிட்டர் பக்கங்களை பின் தொடர்வது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு வியூகங்களுக்கு வழி வகுத்துள்ளது. அவர் காங்கிரசை ஆதரிப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பா.ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்தின் விளம்பர தூதுவராக இருக்கும் அமிதாப்பச்சன் ஒரு காலத்தில் நேரு குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராகவும், ராஜீவ்காந்தியின் நண்பராகவும் இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் அவர் திடீரென்று காங்கிரஸ் தலைவர்களின் டுவிட்டர் பக்கங்களை பின் தொடர்கிறார்.

மேலும் லல்லுபிரசாத், அவரது மகள் மிஸாபாரதி, நிதிஷ்குமார், சீதாராம்யெச்சூரி, உமர் அப்துல்லா ஆகியோரின் டுவிட்டர் பக்கத்தையும் சமீபகாலமாக அமிதாப்பச்சன் பின் தொடர்கிறார். அவர் மொத்தம் 1689 பேரின் டுவிட்டர் பக்கங்களை பின் தொடர்கிறார். ஆனால் அமிதாப்பச்சனின் டுவிட்டர் பக்கத்தை 3.31 கோடி பேர் பின் தொடர்கின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com