இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி- எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பிரசாரம் செய்து வெற்றிக்கு வித்திட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஏ.சி.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்
Published on

சென்னை:

புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு எதிராக கடுமையான பிரசாரத்தில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்ட போதும், மக்கள் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் இவ்விரண்டு தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை வழங்கி உள்ளனர்.

தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்து வெற்றிக்கு வித்திட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com