தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 9 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
Published on

தருமபுரி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுறுமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரியில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரமோகன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக 4 ரோடு அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் கோஷங்கள் எழுப்பி நகல்களை எரிக்க முயன்றனர். இதனை பார்த்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தனர். பின்னர் அவர்கள் எரிக்க முயன்ற நகல்களை வாங்கினர். இதையடுத்து பேரணியாக வந்த தி.மு.க.இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரமோகன் உள்பட 9 பேரை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தால் இன்று காலை தருமபுரி 4 ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com