ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 9 பேர் பலி

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த சுமார் 9 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 9 பேர் பலி
Published on: 

புபனேஸ்வர்:

ஒடிசா, மேற்குவங்கம், அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல கோடி ரூபாய் அளவிற்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் நேற்று உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.

சுந்தர்கர் மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதுதவிர பாலசோர், பாத்ராக், ஜார்சுகுடா, பார்கார், கேந்தபாரா, கியோஞ்சார் மற்றும் ஜஜ்பூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய்த்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜஜ்பூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 11 கால்நடைகள் மின்னல் தாக்கியதில் பலியாகி உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com